
விடுமுறைக்கு சென்ற மனைவியும் குழந்தைகளும் இன்னும் வரவில்லையென்றும், சம்பவம் நடந்த போது பேராசிரியர் தனியாக தான் இருந்தார் என்றார். பீரோ திறந்திருக்க, உள்ளே லாக்கர் சுத்தமாக காலியாயிருந்தது. உடலெங்கும் பல வெட்டுக்காயங்களோடு உறைந்த பார்வையோடு சாக்பீஸ் கோட்டுக்குள் கிடந்தார் பேராசிரியர். உயிருக்கு போராடிய நிலையில் கூட சுட்டு விரலால் தன் ரத்தத்தாலேயே சுவற்றில் Fe என எழுதியிருக்க, அடுத்த வீட்டு Fernandesஐ பிடித்து மிரட்டிக் கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர். என்னைப் பார்த்ததும் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடித்த பெருமிதத்தோடு ஒரு instant சல்யூட் அடித்தார்.
நடுங்கிக் கொண்டிருந்த Fernandes என்னைக் கண்டதும் கதறி அழுதார். தானும் IIT பேராசிரியர் என்றும், உடன் பணியாற்றும் பேராசிரியருடன் பகையிருந்தும் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் இல்லை என்றார் உடைந்த குரலில். திருடு போன நகை, பணத்துக்கும் Fernandesஇன் நிதி நிலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், அவரை விடுவிக்குமாறு கூற, S.I. என்னை முறைத்ததை ஓரக்கண்ணில் பார்த்தேன்.
அப்படியே அந்த குடியிருப்பு கட்டிடத்தை பார்வையிட்டு கீழே வந்த போது தான் அவன் கண்ணில் பட்டான். மார்கழி மாத குளிரில் தொப்பலாக நனைந்து, அகால நேரத்தில் துணிகளை இஸ்திரி போட்டு கொண்டிருந்தான். என் கண்களை நேரடியாக பார்ப்பதை தவிர்த்த அவனை ஒரு அறை விட்டதில், பேராசிரியரை கொன்ற உண்மையை கக்கினான்.
Fe என்பது Ironஐ குறிக்கும் என்பது பத்தாவது வகுப்பு மாணவனுக்கு கூட தெரியும். பாவம் எங்கள் S.I.க்கு தான் தெரியவில்லை.
Related Posts


Vignesh
Posted in:
1 comments:
Hi Vignesh,
T'was a cute story. Reminded me of Da Vinci Code. I've started a story blog too.
http://Ideasincorporated.blogspot.com/
Post a Comment