Jul 11, 2017

‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை


என்னங்க 'நாய் நாகராஜனோட அடி  மனசுக் குமுறல்களை மட்டும் தான் பிரசுரிப்பீங்களா ?எங்களேட கஷ்ட நஷ்டங்களையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க' என்று கரைகிறார் "காக்கா" கந்தசாமி. 



ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு 'காக்கா'க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, "காக்கா 'கா கா'ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா "கா கா"ன்னு கத்துதா?ன்னு" ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி? நாங்களெல்லாம் ஒரே மாதிரி "கா கா"ன்னு தான் கத்துறோம், ஆனால் ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலயும் ஒவ்வொரு மொழியில பேசிக்கிறாங்க. அந்த பாகுபாட்டினால, தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?

எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற "விருமாண்டி" கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி "பாய்ஸ்" ஹீரோ, ஹீரோயின் போல "கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்"ன்னு ஜாலியா பாடுவோம். 

குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க 'கா கா'ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொறிச்சு வர குயில் குஞ்சு நாராசமா "கூ கூ"ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும். 

இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு 'நெகட்டிவ் ரோல்' தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.

ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர "காக்கா"வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!

- My article published in Nilacharal.com 

Sep 9, 2011

என்ன கொடுமை சார் இது? Part 9





அலுவலக வேலையாக பெரு சென்றிருந்த போது ஒரு கடையில் ஆசையாக ஒரு பொம்மையைக் கையில் எடுத்து… முகம் சிவந்து திரும்பிப்பார்க்காமல் வெளியே ஓடி வந்தேன். நம்ம ஊர் பொம்மைகள் சிரித்தபடி தலையாட்டும், இல்லை அலுங்காமல் நடனமாடும். ஆனால் அவர்களுக்கு ஏன் தான் இப்படி ஒரு விவஸ்தை கெட்ட ரசனையோ? வெளியே வந்த பிறகும், பின்னாலேயே துரத்தி வந்தது சேல்ஸ் பெண்களின் சிரிப்பொலி.

Aug 3, 2010

உயிர்த்துளி - சிறுகதை






தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்து , சுவற்றில் சாய்ந்தான் தமிழ்ச்செல்வன். இந்த இருட்டறைக்குள் தள்ளப்பட்டு எவ்வளவு யுகங்கள் ஆனதென்றே தெரியவில்லை அவனுக்கு. மீண்டும் சூரியனைக் காண்போம் என்ற நம்பிக்கையும் எப்போதோ அஸ்தமனமாகியிருந்தது.

Apr 22, 2010

Pa(a)renthood



Bringing a child into this world and then raising him or her demands a lot of time, energy and sacrifices. Though each and every micro second of fatherhood is enjoyable and each moment  cherish-able, I am sure most of young fathers will more than agree to the following common traits of fatherhood:



 • You catch up with your forgotten reading habit, with the moth-eaten magazines in Paediatrician's waiting room
 • You may be sleep deprived, thanks to your nocturnal kid, but you get new friends like your street's Goorkha  and callcentre employee neighbour
 • Your patience often gets confronted with tough tests and eventually you become a saadhu or 'Sethu'. 
 • Your baby's antics end up with family oldies digging up the most embarrassing moments of your childhood 
 • Your official papers are either torn or wet, relieving you from the stress of work at home
 • You  get priority seating in buses  and are allowed to board aircrafts first
 • Your MP3 playlist is replaced by nursery rhymes and DVD collection filled with Pixar & Disney flicks
 • Your wife and baby have a special language and your vocabulary being zero
 • You start watching Thomas the cat running after Jerry
 • You find Johnson & Johnson encroaching your dressing table 
 • Your love for your mobile phone wanes after it gets smeared with baby food and used as teether

Dec 11, 2009

Back to Future


Living in an ultramodern internet era with well sophisticated technologies emerging everyday, we don't have time to read our country's puranas and epics. If we go through them, we can find various prototypes of our recent scientific advances. Let's have a glance at a few......
 • First transplant : Lord Ganesha
 • First Flight : Pushpaka Vimaanam
 • First in-vitro-fertilization :Kundhi Devi conceived Karna thro' Surya (Sun).
 • First Television show : World seen revolving in Krishna's mouth
 • First Eye donor : Kannappan
 • First Distant education student : Ekalaiva
 • First Quality control officer :Sabari, who checked the quality of fruits by biting before giving them to Rama.
 • First Person to use mouse :Lord Ganesha, well as a vehicle.
 • First Courier service : "Annam" Bird used to convey messages between Nalan and Dhamayanthi
 • Theory of Evolution :According to Charles Darwin's theory, every organism on earth evolved from a common ancestor. Fish was the first to evolve which then evolved to reptile then bird and then mammals. Likewise, First avathaar of God was "Matsaya avathaar"(Fish) followed byKurma(Turtle) avathaar and then chimeric form (Narasimhathen to human form and then tosuper human form (Kalki)
- My article published in Nilacharal.com in 2002

Dec 7, 2009

Paranormal activity


WHAT HAPPENS WHEN YOU SLEEP?

You snore...

Cockroaches jog around their nocturnal domain - your kitchen sink...

An occasional geriatric security strolls the street, tapping his stick...

BPO guy takes a puff,gulps a tea & gets back to his chat...

Neelmetal fanalca staff scrape the rainwater-corroded roads...


well..."What happens when you sleep?" is the tag-line of the most talked about horror movie of the year - Paranormal activity.
In this movie, a demon??!! haunts the lead character Katie and her boyfriend helps her by capturing its paranormal activity on video camera, while they sleep. The film maker Oren Peli has tried his hand to tap into a man's most primal fear of "If something is lurking in your home there's not much you can do about it".

The whole movie is made in a documentary format , with a handheld camcorder recorded by the lead actor and without any background score that usually enhance the eerie feel for a
horror movie. After a particular point, it gets very monotonous, with footages of the self-shot nights , and the useless demon really doing nothing, rather than sneaking into the bedroom and occasionally banging the door and howling.

It seems that famous script writers of Hollywood walked out of the screening of this movie, because they were scared and Spielberg is said to have loved this movie. It has set the record as the most profitable independent film ever made, having earned over $100 million with a production budget of $15,000.

Dunno why, but this doesn't strike a chord for viewers like me, who are used to scary ghosts and spine-chilling background scores. The same hollywood that literally laughed at "The Grudge", because it was remade from a Japanese movie, hails Paranormal activity, a master-piece.

Wondering who's not normal...

Related Post:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons