Jun 13, 2009

ராஜாவின் இசையும் சில கோணல் எழுத்துக்களும்


சர்க்கஸில் கிழட்டு சிங்கம், பல் போன புலி, மரணக்கூண்டில் பைக் ஓட்டுபவர், பார் விளையாட்டு மங்கை என எல்லோரையும் விட கைதட்டலையும் கவனத்தையும் பெறுவது கோமாளியின் கோணங்கித்தனங்களும், கிறுக்குத்தனமான தோற்றமும் தான். தமிழ் இலக்கிய உலகிலும் அதே தான். "எல்லோருக்கும் ஒரு வழி என்றால் இடும்பனுக்கு ஒரு வழி" என்பது போல, எல்லோரும் ஒருமித்த கருத்தோடு இருந்தால் விலகி , தான் வித்தியாசமானவன் என்று நிலைப்படுத்த முயற்சிக்கும் கண்ணாடி, ஜோல்னா பை அரை வேக்காடுகள் நம் ஊரில் அதிகம். அதில் அதிமுக்கியமானவர்கள் விகடனில் முன்பும், குமுதத்தில் இப்போது ஓ போடுபவரும், கோணல் பக்கங்கள் கிறுக்கிய சாரு நிவேதிதாவும்.
பெண் பெயரில் எழுதுபவரெல்லாம் சுஜாதா ஆகிவிடமுடியாது. எல்லாரும் வாயால் சாப்பிடுகிறார்கள், ஆனால் நான் வித்தியாசமாய் சாப்பிடுவேன் என்பதை போன்ற சாருவின் எழுத்துகளை நான் மதித்ததே இல்லை.
ஒரு நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இந்த கோணல் மனிதனின் "நான் கடவுள்" விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. "நான் கடவுளை'ப் பற்றி பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் எழும்பிய போதும், ராஜாவின் பின்னணி இசை, பாடல்களை கேட்டு மெய் சிலிர்க்காதவர்கள், கண்ணாடி மாட்டுவதற்காக காது வைத்திருப்பவர்கள். படத்தின் ஒரு பாத்திரமாய் மாறி, ஊனை உருக்கி இழைந்து, ரவுத்திரம் காட்ட வேண்டிய இடத்தில் உடுக்கை அடித்து உறுமி என ராஜாவின் பங்களிப்பு பிரமிப்பூட்டியது யாராலும் மறுக்கமுடியாது.
ராஜாவின் உயிரை உருக்கும் இசையை "ரொமாண்டிக்" என்றும், கரகாட்டக்காரன் படத்துக்கு அமைத்தது போல பின்னணி இசை அமைத்திருக்கிறார் என்கிறார் இந்த இசை விமர்சகர். கேரளாவில் அவருக்கு பிடிக்காத ஒரே விஷயம் ஜேசுதாஸின் குரலாம். ஜேசுதாஸின் பாடல் கேட்டால் அவருக்கு வயிறு வலி வருமாம்.

மார்ச் மாதத்தில் அவர் எழுதிய கோணல் வரிகளை கொஞ்சம் சாம்பிள் பாருங்கள்


"மரணத்தின் தர்க்கம் யாருக்குமே புரிவதில்லை. ஏழை பணக்காரன், ஆண் பெண், நல்லவன் கெட்டவன் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அது பாட்டுக்கு வருகிறது, போகிறது. இவ்வளவு புதிரான ஒரு விஷயத்திற்கு இளையராஜா ஒரு ரொமாண்டிக்கான இசையைக் கொடுத்திருக்கிறார். மனித சமூகமே கண்டு நடுங்கும் மரணத்தை ரொமாண்டிக்காகப் பார்த்த ஒரே மனிதர் இளையராஜாவாகத்தான் இருக்க முடியும். அம்சவல்லி பாடும் தருணங்களில் எல்லாம் ராமராஜனின் கரகாட்டக்காரனுக்கு அமைப்பது போல் பின்னணி இசை தந்திருக்கிறார் இளையராஜா. எவ்வளவுதான் உயர்ந்த கலைப்படைப்பாக இருந்தாலும், இப்படிப்பட்ட இசை அந்தப் படத்தின் நம்பகத்தன்மையைக் குலைத்து மசாலா படமாக ஆக்கிவிடும்
’பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எனக்கு ’மன்னன்’ படத்தில் ரஜினிகாந்துக்காக மேஸ்ட்ரோ பாடும் "அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ" என்ற ‘செண்ட்டி’ பாட்டையும் நினைவு படுத்தியது.
இப்படி இருந்தால் தமிழ் சினிமாவை உலக அளவில் எப்படி விவாதிப்பார்கள்? உலகின் மிக முக்கியமான காவியப் படைப்புகளில் (Epic) ஒன்றாகப் பேசப் பட்டிருக்க வேண்டிய இந்தப் படத்தை, மசாலா சினிமாவாக மாற்றும் மேஸ்ட்ரோவின் கைங்கரியத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அம்சவல்லியை விற்பதற்காகத் தூக்கிக் கொண்டு போகும் போதும் இதே மாதிரியான ரொமாண்டிக் இசைதான் நம் செவிகளை வட்டமடிக்கிறது"அதே கோணல் மனிதரின் சமீபத்திய பதிவையும் படித்துப் பாருங்கள்...

"சமீபத்தில் இளையராஜாவின் திருவாசம் பாடல்களில் ஒன்றை ரொம்பவும் நெக்குருகிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவந்திகா "உங்களுக்குத்தான் இளையராஜாவைப் பிடிக்காதே?" என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
"ஆமாம், பிடிக்காது."
"அப்புறம் இது என்ன?"
"ம், என்ன?"
"இதை இப்படி உருகி உருகிக் கேட்கிறீர்கள்?"
"ஆமாம், கேட்பேன்."
"அடச்சே, லூஸு... உன் கிட்ட கேட்க வந்தேன் பார்" என்று தலையில் அடித்துக் கொண்டே போய் விட்டாள்."

என்னத்த சொல்றது? இந்த வருடம், சென்னையில் வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்.!!!!!!!!!!!!!!!!!!

6 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ்

என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

பாலா said...

ithai naanum paarththurukkiren nanbare

ithukku avara keta
naan "pin naveenakkaaran " appadineenu solluvaar

ithellam namakku thevaiyaa

avar loosave irunthuttu popgattum vidunga boss

Manonmani said...

antha janthu oru alpam

Anonymous said...

அவருடைய வலைப்பக்கத்தில் ஆனந்த் என்பவர் ஜெ.கெ.வையும் யூ.ஜி.யையும் ஒப்பிட்டு மிக தெளிவாக அருமையாக கடிதம் எழுதியிருக்கிறார். அதற்க்கு சாரு எழுதிய அபத்தமான உளரல்கள் சரியான காமெடி. கவனித்தது என்னவென்றால் அவரால் சப்ஜெக்டை ஒட்டி எதையுமே எழுத முடிவதில்லை. ஒரே உளரல் தான். காசு தான் பிரதானம்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

படு டீசென்டான மூக்கறுப்பு நண்பரே.
அளவுக்கு அதிகமான குடி , கண்ட கண்ட மாமிசம், பரத்தையர் தொடர்பு ஒரு மனிதனை இருக்குமிடம் தெரியாமல் ஆக்கிவிடும்.
தன்னை தானே ஒருவர் வெகுவாக புகழ்ந்து கொள்வதை கேட்டிருக்கிறோம், சினிமா காமெடிகளிலும் பார்த்து கைகொட்டி சிரித்தும் இருக்கிறோம்.
அதை நேரில் பார்க்க வேண்டுமெனில் சாரு நிவேதிதாவின் தளம் சென்று பார்க்கலாம்,
அப்புறம் உங்கள் தளத்தில் நுழைந்து பார்த்தால் " அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்பது போலவும்,எழுத்தாளர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாலும்,அவருக்கு இதை தவிர வேறு ஏதும் தொழில் இல்லாததாலும் இதை தர்மகாரியமாக செய்து தமிழ்ப்பணி வளர்ப்பதாலும் "தாங்கள் காசோலை,டிராப்ட் ,வீசா ,மாஸ்டர் கார்டு போன்ற எந்த வழியிலும் பணம் அனுப்பலாம்,முற்றிலும் வரி விலக்கு உண்டு என்ற விளம்பரம் பார்க்கவே சகிக்கவில்லை."
http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_8570.html

Anonymous said...

அவனஎல்லாம் ஒரு மனுஷனா மதிச்சு பேசுவதே தவறு ....தண்ணியையே பாக்காதவன் நீச்சல் அடிக்குறவன் பத்தி விமர்சனம் செய்த மாதிரி இது..
அவன் பேச்செல்லாம் காக்கா எச்சம் மாதிரி விழத்தான் செய்யும் தலைல !!! அத்த
தொடைச்சிட்டு போய்டனும் !!! தொட்டு நக்க நினைக்க கூடாது !!!!!!1

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons