'Saw'ன்னா பார்த்தேன் தான் அர்த்தம். அதென்ன Saw பார்த்தேன்?
வாங்கிப் போட்டு பூமி 2 தடவை சூரியனை சுற்றி வந்திடுச்சு ஆனா அந்த Saw டிவிடியை சுழல விட நேத்து தான் நேரம் அமைஞ்சது. நம் மக்கள் பலபேருக்கு மடியில ஒரு படி கோக், பக்கெட் நிறைய பாப்கார்ன் அரைச்ச படி படம் பார்த்தா தான் பார்த்த மாதிரி இருக்கும். ஆனா வயிற்றுக்குள்ள போன கோக், பாப்கார்ன், முந்தைய நாள் மதியம் சாப்பிட்ட அளவுச் சாப்பாட்டையும் வெளியே கொண்டு வர மாதிரியான படம் தான் "Saw".
யோசிச்சுப் பார்த்தா நம்ம தமிழ்ப்படங்கள் இன்னும் கதாநாயக வழிபாடு, புதுமுக சின்னஞ்சிறுசுக காதல், நியூட்டனுக்கு சவால் விடும் புவியீர்ப்பற்ற சண்டை என குண்டுச்சட்டியிலயே கும்மியடித்துக் கொண்டு, புதுப்புது ஜானர் (Genre) படங்களுக்கு வழி விடுவதே இல்லை. வெள்ளைச் சேலை கட்டி அரையிருட்டில் கொலுசொலியோடு பாட்டுப் பாடும் பேய், கறுப்புக் கோட்டு போட்ட கொலைகாரன், டீவியில் சீரியல் தயாரித்து வெளியிட்டுப் பழிவாங்கும் பேய் என ஹாரர் / த்ரில்லர் வகைப் படங்களையும் ஒரு ஃபார்முலாவில் கட்டிப் போட்டு மொக்கை போடுகிறார்கள்.
Psychological thriller / Torture theme என்பதெல்லாம் நமக்குப் புதுசு. வாழ்க்கையின் மகத்துவம் புரியாதவர்களுக்கு தண்டனையளித்து தன் உயிரின் மதிப்பை உணர்த்தும் ஒரு கேன்சர் நோயாளி தான் ஜிக்சா (Jigsaw) கொலைகாரன். நேரடியாக கொலை செய்யாமல், ஒரு விதமான விளையாட்டு போல மூளைக்கு வேலை கொடுத்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்யாவிட்டால் கொடூர மரணம் சம்பவிக்க வைப்பது பார்ப்பவருக்கு முதுகுத்தண்டில் ஐஸ் கத்தி ஏற்றும். சீட்டின் நுனிக்கு வந்து நகம் கடிக்க வைக்கும் திரைக்கதை, மிகையில்லாமல் பயமுறுத்தும் ஒளிப்பதிவு, அறிவுப்பூர்வமான நெறியாழ்கை என தொழில்நுட்ப பலத்துடன் குறைந்த முதலீட்டில் எடுத்து நிறைய லாபத்தையும் ரசிகர்களையும் சேர்த்த இப்படத்துக்கு இதுவரை 5 பாகங்கள் வெளிவந்துள்ளன.
'Shutter' படத்தை நம்ம ஆளுங்க 'சிவி'யாக்கி அசிங்கப்படுத்துன மாதிரி , இந்தப் படத்தை "ரம்பம்" என்கிற பெயரில வெளியிட்டு மக்களை torture பண்ணாம இருந்தா சந்தோஷம் .
Related posts:
1. The Grudge
1 comments:
நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html
Post a Comment