1. உட்கார்ந்திருந்த காக்காவை விரட்டி ஆண்ட்டெனாவைத் தென்திசை திருப்பி புள்ளி புள்ளியாய் ரூபாவாகினி தேடியது...
2. 'Good ones only' என்று சொல்லி 36 ஃபோட்டோ ஃபிலிம் சுருளை லேபில் கொடுத்து, நகம் கடித்துக் காத்திருந்தது...
3. ஞாயிறு காலை சோம்பல் களைந்து, கண் விழித்து மொக்கைக் கார்ட்டூனும், ராமானந்த் சாகரின் 'ராமாயண்' பார்த்தது...
4. கனமான கறுப்பு திருஷ்டி தொலைபேசியில் விரல் நோக நம்பர் சுழற்றி, ட்ரங்க் காலில் ராங் நம்பர் கிடைத்தது...
5. குடிக்கும் லாவகம் பழகாமல், குண்டு உருண்டு வந்து அடைத்தும் கோலி சோடா குடித்தது...
6. 60 என்றால் 12 பாடல்கள், 90 என்றால் 18 பாடல்கள் என்று TDK, T-series கேசட்களில் பாடல்கள் பதிந்து கேட்டது...
7. பாக்கெட், சாஷே படையெடுக்கும் முன், காலி ஆவின் பால் பாட்டிலை வீட்டு வாசலில் வைத்துத் தூங்கப் போனது...
8. ஹீரோ பேனாவின் பேண்டைக் கழற்றி இங்க் உறிஞ்சி, கையில் ஒட்டிய மையை தலையில் தடவியது...
இங்கே சொல்ல மறந்த, பிற மறந்த விஷயங்களை பின்னூட்டங்களில் நிரப்பவும்...
Related Posts:
4 comments:
This is a wonderful post. so nostalgic! you have captured them so well. please give me some time to take a trip back in time and i shall then come and fill it in here. please keep blogging!
என்ன விக்கி இவ்வளோ நாள் எங்க ஒளிஞ்சிருந்தீங்க? நான் படிக்க ஆரம்பிச்சப்பவே நீங்க எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. சீக்கிரம் tamilmanam.net லும் உங்க blogஐ add பண்ணுங்க. கூடவே google friends follwer widget add பண்ணினால், நாங்க எல்லாம் உங்க பின்னாடி வர வசதியா இருக்கும்..
Thanks Gayathridevi...
still on a time travel?
மிக்க நன்றி நாகா.
நீங்க சொன்ன மாதிரி பண்ணியாச்சு
Post a Comment