
பேய்களுக்கு தான் Missed Call ஆச்சே , அதாங்க கால் கிடையாதே,
ஆனா வரும் போது DTS Effect ல கொலுசு சத்தம் கேட்கும்ன்னு சொல்றாங்களே எப்படி ?
விமானப் பயணத்துல பல் குத்துற குச்சி கூட hand baggage ல இருக்கக்கூடாதுன்னு தடை போட்டு , உள்ளுக்குள்ள ரொட்டிய அறுத்து வெண்ணை தடவ ஆளறுக்கும் கூரான கத்தி தர்றாங்களே. Hijack பண்றதுக்கு அது போதாதா?
Brandy, Whisky, Beer, vodka மற்றும் wine எல்லாம் விற்கப்படும் போது, ஏங்க எல்லா டாஸ்மாக் கடைகளுக்குமே wine ஷாப் என்று பெயர் வந்தது ?
hCG டெஸ்ட் அது இதுன்னு இருக்க சினிமா டாக்டர்கள் மட்டும் மயங்கி விழுந்த ஹீரோயின் கை பிடிச்சு நாடி பார்த்து , வீணை பின்னணியில ஓலிக்க, 'Congrats' சொல்றாங்களே எப்படி ?
இருபது லட்ச ரூபாய் கொடுத்து சொகுசு கார் வாங்குறவங்களுக்கு seat மேல இருக்கிற பாலிதீன் கவர பிரிக்க மனசு வர மாட்டேங்குதே?
ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம் ன்னு எங்க வாத்தியார் சொன்னார். ஆனால் டீவி ஆன் பண்ணின உடனே ஒளிக்கு முன்னாடி ஒலி வருதே ?
Other Posts:
4. Woman on Top


Dr Vignesh Ram
Posted in:
0 comments:
Post a Comment