
"தெருக்கோடி பிள்ளையார் கோவில் முன்
ஒரு ஜோடி செருப்போ, சிதறும்
அரைமூடி தேங்காயோ இல்லை;
பல கோடி சொத்துள்ள, நீர் தரா மாநில சாமிக்கு
தலை முடியுடன் காணிக்கையும் கொட்டி மகிழ்வோம்!
சதி பல செய்து, மலை தோன்றும்
நதி குறுக்கே அணை கட்டும் சிறு
மதி கொண்ட மாநிலத்து கடவுளுக்கு
விதி பலனாய் விரதமிருந்து கல்,முள் நடந்து
சன்னதி சென்று கோஷம் போடுவோம்!
தமிழ்க்கடவுள்,
கோபத்தோடும்
கோவணத்தோடும்
கால் கடுக்க
மலை மேல் நின்றிருக்க...!"
Related Posts:


Dr Vignesh Ram
Posted in:
0 comments:
Post a Comment