
வந்த வேலை கடனே செய்து திரும்பின குப்பனும் சுப்பனும் போல
ஊருக்குள் வராமல், கொல்லைப்புறமாம் கோயம்பேட்டில்
பயணிகள் உதிர்த்து, வந்த வழியே பைபாஸில் திரும்பிப்போ
எனப் பணித்த ஆம்னி பஸ்கள் இன்று மீண்டும் சாலைகளில்
சாரி சாரியாய் குரல்வளை நெறிக்க ...
கட்டிட வேலை செய்து கல் சுமந்து கைரேகை தேய்ந்த கூட்டம்
கட்டண உயர்வால் கால்நடையாய் செல்ல
கணிணி வெறித்து, காலணா பெறாத மின்னஞ்சல் பரப்பி
காஃபிடேரியாவில் கடலை வறுத்து, கழுத்தில் கம்பெனி கயிறோடு
கண்ணயர்ந்து ஆம்னி பஸ் அம்பாரி மேலமர்ந்து சாலை பிதுக்குகிறார்கள்
கடவுளே காப்பாற்று சென்னையை!
- விக்னேஷ் ராம்
Published in Neythal இதழ்
Related Posts:
1. Omni(Present) Buses
2. Dog's life
3. Bachelor Kavidhai
4. Enna Kodumai Sir Idhu


Dr Vignesh Ram
Posted in:
0 comments:
Post a Comment