
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போகும் டாக்டர் போல சிக்னலில் நிற்காமல் அவசரப்படும் ஆட்டோ டிரைவரை
முன்னந்தொடையில் நாய் நக்கியது போல வெளுத்துப்போன, துவைத்தறியா ஜீன்ஸ் அணிவோரை
தெருக்கோடி பிச்சைக்காரனுக்கு பத்து காசு தராமல், பக்கத்து மாநில கோடீஸ்வர கடவுளுக்கு கோடி கோடியாய் கொட்டுவோரை
அவசரமாய் அழைக்கும் போது ஃபோனை எடுக்காமல் லேட்டஸ்ட் ஹிட் பாடல் callertune கேட்க வைப்போரை
நாகம் போல நாக்கை நீட்டி விரலால் தொட்டு டிக்கட் எண்ணும் 'எச்சில்' கண்டக்டரை
கம்ப்யூட்டர் யுகத்திலும் இந்த ஈ-மெயிலை பத்து பேருக்கு அனுப்பாவிடில் ரத்தம் கக்கி சாவாய் என்று பயந்து, பயமுறுத்தி மெயில் அனுப்புவோரை
டம்ளருக்குள் விரல் விட்டு தண்ணீர் கொடுத்து, மாமியாருக்கு பரிமாறும் மருமகள் போல கவனித்துப் பின் 10 சதவீத டிப்ஸ் எதிர்பார்க்கும் சர்வரை
அப்படியே vigneshram.blogspot.com வலைத்தளத்திற்கு அடிக்கடி வருகை புரியாதவர்களையும்...
Related Posts:
4. Woman on Top


Vignesh
Posted in:
6 comments:
Romba Sujatha padikaadha.
இப்படியெல்லாம் சொல்லி எங்களை அனுப்பிட்டா உங்க பதிவை யார் படிக்கிறதுங்க
யாருங்க தமிலிழில் வாக்கு பதிவு பண்ணுவாங்க..
ரொம்ப கொடுமையா இருக்க கூடாதுங்க
தேவயில்லாம எதுக்கு புலிய இழுக்கிறீங்க?
//முன்னந்தொடையில் நாய் நக்கியது போல வெளுத்துப்போன, துவைத்தறியா ஜீன்ஸ் அணிவோரை//
இது உம்மை எந்தவிதத்தில் பாதித்தது?
buginsoup -
"துவைத்தறியா ஜீன்ஸ்" அணிந்தோர் அருகில் அமர்ந்து பயணம் செய்திருந்தால் தெரிந்திருக்கும்
Post a Comment