Feb 17, 2009

மூளைய எடுத்து மியூசியத்துல வைக்கணும்...

மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் தான் தற்சமயம் ( ஒன்றரை மாதமாக) டேரா. அமெரிக்காவின் அனாவசிய அவசர வாழ்க்கை முறையை வெறுப்பவர்களுக்கு இந்நகரம் ஒரு நிதான சொர்க்கம்.


எந்த ஊர், நாட்டுக்கு வந்தாலும் நண்பர்கள் பார் போற்றும் பாரை முற்றுகையிட , நான் விரும்பி செல்வது அருங்காட்சியகத்துக்கு. பெர்த்தின் அருங்காட்சியகத்திற்கு நுழைவு கட்டணம் இல்லை. 2 ஆஸ்திரேலிய டாலரில் தொடங்கி எவ்வளவு வேண்டுமானாலும் அங்கிருக்கும் கண்ணாடிப் பெட்டியில் போட்டு உள்ளே வரலாம்.
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பொருளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி , சிறந்த வர்ணனைகளோடு வைத்திருந்தது அருமை. ஜுராசிக் பார்க் பார்த்து ரசித்திருந்த ஒரு 5 வயது ஆஸ்திரேலிய வாண்டுக்கு டினோசாரின் எலும்பு கூடு பிடிக்கவே இல்லை. ஏன் அதற்கு கண்கள் இல்லை என அப்பாவை படுத்தி எடுத்துக்கொண்டிருந்தது. பாடம் செயயப்பட்ட மிருகங்கள், வானத்தில் வெடித்து சிதறிய எரி நட்சத்திர துண்டுகள் என பார்த்து கொண்டே வந்த நான், ஒரு குறிப்பிட்ட பகுதியின் காட்சி பொருட்களைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

அவை 1940 கள் காலத்திய சிறுவர் சிறுமியர் விளையாடிய பொம்மைகள். ஜப்பானில் செயயப்பட்ட கார்கள், ரோபோ பொம்மைகள் அங்கே காட்சி பொருளாக இருந்தது தான் எனக்கு ஆச்சரியம். எங்கள் வீட்டுப் பரணில் இதனை விடவும் பழமையான தாத்தா பாட்டிய காலத்திய பொருட்கள் இருக்குமே. சொல்லப் போனால், நம் நாட்டில் ஒவ்வொரு வீட்டு பரணும் ஒரு மினி அருங்காட்சியகம் அல்லவா. ஆனால் அங்கெல்லாம் கரப்பான் , பல்லி, எலிகள் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. பழைய வற்றின் அருமை நமக்கு தான் தெரிவதில்லை. பழையன கழிதல் வேண்டும் என்று நாம் தான் இந்திய கலாச்சாரத்தையே போகி தீயில் டையரோடு எரித்து விட்டோமே.

180 வருடங்கள் மட்டுமே வயதான பெர்த் நகரத்துக்கு இவையெல்லாம் பொக்கிஷமாக தெரிய , நமக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய யாழி சிற்பங்களின் தலை உடைப்பது வீர விளையாட்டு, ஏழு சுரம் ஒலிக்கும் ஆயிரம் கால் மண்டப கல் தூணில் செத்த மோளம் வாசிப்பது நகைச்சுவை விளையாட்டு . தேசத் தந்தையின் ரத்தம் தோய்ந்த துணி காட்சிபடுத்தப் பட்டிருக்கும் கருப்பு அறையில் காம்பஸ் உளி கொண்டு தன் பெயரையும் காதலி ??? பெயரையும் எழுதி இதயம் வரைந்து நடுவே அம்பு விட்டிருக்கும் நம் இளைய சமுதாயத்தை நினைத்து பார்த்து ஒரு பெரும்ம்ம்ம்ம்ம்ம்ம் மூச்சு விட்டு வெளி வந்தேன்.
நம்ம ஆளுங்க மூளைய தான் எடுத்து மியூசியத்துல வைக்கணும்...

Related Post:

2 comments:

பிரேம் said...

சரியான நச் முடிவுரை!!

நல்ல பதிவு... சென்னையில் உள்ள அருங்காட்சியத்தில் ஏராளமான அரிய பொருட்கள் இருந்தாலும், அவை 'போனால் போகட்டும்' என கண்டமேனிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன!!

Jayaprakashvel said...

machi
very good post. have u seen an advertisement in which Amir appearing has given the same message. Most of our forts are now used as third rated lodges only.But who cares. Only film directors go there shoot and come back.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons