பிறப்புச் சான்றிதழ், பிறந்த சாதிச் சான்றிதழ் இங்கிருந்து
கல்விச் சான்றிதழ், கையோடு பாஸ்போர்ட் இங்கிருந்து
கை நிறைய சம்பளம் பத்தாதென கிளம்பினேன் இங்கிருந்து
தள்ளாத வயதில் தாய் தந்தை தனியாய் தவிக்க இங்கிருந்து
உண்ட வீட்டில் சாணி போட்டு,
அண்டை வீட்டுக்கு பால் கொடுக்கும் பசுவாய்
பை நிறைய சம்பாதித்து முக்கால் பையை வரியாய் செலுத்தி
பத்து ஏக்கர் நிலம், பண்ணை வீடு ஊரில் அனுபவிக்காமல்
பத்துக்கு பத்து அப்பார்ட்மென்டில் முடங்கி...
கிடைத்த லீவில், கிடைத்தவளுக்கு அவசர தாலி கட்டி
மொழி தொலைத்து, கலாசாரம் தொலைத்துக் குழம்பிய குழந்தை பெற்று தாத்தா பாட்டியை web cam ஒளிபரப்பில் அறிமுகம் செய்து
பருவ வயதில் அவள் பாய் ஃபிரெண்ட் கருப்பனோடு டேட்டிங் செல்ல
என்னிடமே செகண்ட் ஹேண்ட் கார் சாவி கேட்க பதறி...
மலிவு விலை சாக்லேட், சென்ட் பாட்டில் நிரப்பி
விசா புதுப்பிக்க சம்பிரதாயமாய் தாய் நாடு பயணம்!
அங்கெல்லாம் இது போல் இல்லை என நித்தம் ஒப்பிட்டு
வார்த்தைக்கு வார்த்தை நான்கெழுத்தில் திட்டி, தோள் குலுக்கி
பருப்பு பொடி, ஊறுகாய், சற்றே கனத்த மனதோடு விமானம் ஏறி,
iPod பொருத்தி கண் மூடினால்
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?"
என சவால் விடும் இளையராஜா!
Youthful விகடனில் வெளியான எனது கவிதை
0 comments:
Post a Comment