Jun 18, 2009

என்ன கொடுமை சார் இது - பாகம் 7விந்து சேகரிப்பும் முந்தும் கேள்விகளும்!


கண் முன்னாடி அப்படியே கொசுவர்த்திச் சுருளை சுற்றினால், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நுண்ணுயிரியல் வகுப்பில், நோய்களை கண்டறிவதற்கு எப்படி ரத்தம் போன்ற மாதிரிகளை (Specimens ) சேகரிப்பது என்று பாடம் படுத்திட்டு sorry நடத்திட்டு இருந்தார் விரிவுரையாளர் . ரத்தம், நீர், என ஒவ்வொரு மாதிரி சேகரிப்பது பற்றி விலாவாரியாக விளக்கிய அந்த கூச்ச சுபாவ வாத்தியார் விந்து மாதிரி (Semen Specimen ) பற்றி மேலோட்டமாக சொல்லி விட்டு அடுத்த பாடத்துக்கு தாவினார். அதுவரை ஆழ்ந்த நித்திரையில் இருந்த கடைசி பெஞ்சு மாணவன் , உறக்கம் கலைந்து, மிகுந்த ஆர்வத்தோடு "சார் ! ரத்தத்தை ஊசி வச்சு உறிஞ்சிடலாம், நீர் போன்ற மாதிரிகள் வீணாப் போறத பிடிச்சுக் கொடுத்திருவாங்க, எப்படி தான் விந்து சேகரிப்பாங்க ?" என்ற ஏடாகூட கேள்வியை கொளுத்திப் போட்டான். தொண்டையைச் செருமியபடி விரிவுரையாளர் "அது வந்து... அது வந்து.... கிளர்ச்சியூட்டும் படங்கள் கொண்ட புத்தகங்களை இதற்கென்றே வைத்திருப்பார்கள்" என்றார். விட்டானா நம்ம ஆளு? "சார் அந்த patient கண் பார்வை இல்லாதவராக இருந்தால் என்ன செய்வார்கள் ? " என்ற அறிவுப் பூர்வமான கேள்விக்கணையை வீச, வடிவேல் பாணியில் சற்றே ஆடித் தான் போனார் Mr. கூச்சசுபாவம். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு , ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டு " Well that's a good question! In that case, the doctor might ask his wife to accompany him to a private room and help him collect the semen specimen" என்றார்.
"என்ன சார் சொல்றீங்க ? எதுக்காக டாக்டர் தன் மனைவியை Patient கூட அனுப்பி வைக்கணும் ?" என்று அவன் சீரியஸாக கேட்க, அவசர அவசரமாக வகுப்பை சபித்தபடி வெளியேறினார்."History Repeats Itself" என்பது போல, இப்போது வேலை நிமித்தமாக மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையாற்றும் போது, இதனைப் போன்ற தர்மசங்கடபடுத்தும் காமெடிகளுக்கு அளவே இல்லை.
பூஞ்சை (Fungus) வளர்ப்பதற்காக பரிசோதனைக் கூடங்களில் உபயோகிக்கும் Incubator இன் பெயர் BOD Incubactor ( இதனை பி.ஒ. டி. இன்குபேட்டர் என்று கூறுவோம்) . ஒரு அப்பாவி மாணவி மிகவும் சகஜமாக "சார் அந்த பாடு இன்குபேட்டர் வேலை செய்யலை" என்று கூறி வகுப்பையே சிரிப்பில் ஆழ்த்தினாள்.
விந்து மாதிரியை வாயில் வைத்து உறியும் பிப்பெட்டில், அளவுக்கு மீறி உறிந்து குடித்து விட்டு , தான் கருவாகி விடுவோமோ என்ற பயத்தில் நாள் முழுதும் அழுத மாணவி, இளம்பெண்ணின் சிறுநீர் மாதிரியில் , வளைந்து நெளிந்து ஓடும் விந்தைப் பார்த்து "சார் இதில் ஏதோ ஒரு புழு ஓடுது " எனக் கூச்சல் போட்ட மாணவி, மெதுவா விளக்கிக் கூறி அது விந்து என்று சொல்லிக் கொடுத்தால் , ஏதோ கிறுக்கனைப் பார்ப்பது போல் பார்த்து "சார் இது ஒரு பெண்ணோட சிறுநீர் , இதில் எப்படி 'அது' வரும்? " என்று கேட்ட மாணவி என்று பட்டியல் நீண்டு அந்த கூச்ச சுபாவ விரிவுரையாளரை நினைத்துப் பார்க்க வைக்கிறது.

Related Posts:

7 comments:

நாகா said...

பயங்கர கொடும சார் இது :)

மங்களூர் சிவா said...

ROTFL
:))))))))))))

தமிழ்ப்பறவை said...

ஹா...ஹா.. ROTFL...

Vignesh said...

நன்றி நாகா, மங்களூர் சிவா மற்றும் தமிழ்ப்பறவை :-)

E.M. Shankar said...

Super Vikki Anney...Ezhittaalanaaayittenga..Superb...keep it up..
Shankar

கலையரசன் said...

வாழ்த்துகள்,

உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...

VICKYFF said...

Nice Writeup.... :) i like this..Some techniques could come in handy.
I agree with everything you posted in this entry, I’m a loyal reader so please keep updating so often!
Greetings
this is my novel..read if you have time and be my follower.i need around 200 blog follower to publish my novel...hope your support friend...thanks...
wahh menarikk hahahaafarihah-->they r the best rite ^^
wani-chan-->hahah best kn best kn tq!Scarves Scarves

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons