Jul 28, 2009

ராஜ வம்சம் : குட்டிக் கதை


காடு மலைகள் சூழ்ந்த பின்னணியில், அவர்கள் அனைவரும் வரிசையாக கூடியிருந்தனர்.
நான்கு நாட்டின் மக்களும், ராஜ வம்சமும், அமைச்சர்களும் கூடியிருந்ததால் பரபரப்புக்கும் சலசலப்புக்கும் அந்த இடத்தில் பஞ்சமில்லாமல் இருந்தது.
காலம் காலமாய் தொடர்ந்து வரும் நிறப் பாகுபாட்டால் கறுப்பு இனமும், சிவப்பு இனமும் பிளவுபட்டு எதிரெதிர் அணியில் நின்றிருந்தனர்.
கூட்டத்தின் இடையே அவ்வப்போது தன் சேஷ்டைகளாலும் அகடவிகடத்தாலும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர் கோமாளிகள்.
சூரியன் உச்சிக்கு செல்லச் செல்ல ராஜா ராணியின் வைரங்கள் ஜொலித்து எதிரணி ராணியின் வயிற்றெரிச்சலுக்கு உரம் போட்டன.
கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த ராணிகளைக் கண்டு சிவப்பின ராஜாவின் இதயத்தின் லப்-டப் எகிறிக் கொண்டிருந்தது.
சுற்றிலும் ஆட்கள் சேர்ந்து, நடுவில் காசு பணம் குவியத் தொடங்க, சூடுபிடிக்கத் தொடங்கியது. வரிசை வாரியாக முதலில் சேர்ந்த சிவப்பு வைரம் அணி வெற்றி வாகை சூடி, ரம்மி ராகவனை இன்ஸ்டண்ட் பணக்காரனாக்கியது!


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons