Jun 22, 2009

விகடனில் என் சிறுகதை

விகடனின் கோட்டைக்குள் ஒரு வழியாக பின் வாசல் வழியாக நுழைந்த திருப்தி. "புகுந்த வீடு " என்ற என் சிறுகதையை வெளியிட்டு , Grey Matter Matters ப்ளாகுக்கு லிங்க்கும் கொடுத்திருக்கிறார்கள்.


ஈ புகுந்தால் இறகொடியும் காடு...

இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட நேரம்...
அவ்வப்போதைய பறவைகளின் கீச் கீச் தவிர நிசப்தம்...
எங்கோ உயரே மலைகளிலிருந்து இடியென கிளம்பியது காதைக் கிழிக்கும் 'திடும் திடும் என அதிரும் சத்தம். மேலிருந்து ஏதோ காட்டு விலங்குக் கூட்டம் ஓடி வரும் ஆபத்தை உணர்ந்து, வாய் விட்டு கத்தி, வாரி சுருட்டி எழுந்தால், உறக்கம் அப்பிய கண்களால் நாய் கொண்டு வந்த வஸ்துவைப் பார்ப்பது போல பார்த்தாள் என் தர்மபத்தினி.
முன்னிரவில் கண்ட கண்ட (ஓசி) திருட்டு டிவிடி பார்த்தபடி தூங்கிப்போய், கனவு கண்டு விழித்து அவள் தூக்கத்தைக் கலைத்த கோபம். வேலை நாட்களில் கண்ணை விட்டு அகலாத படுபாவித் தூக்கம், சொல்லி வைத்த மாதிரி ஞாயிறு விடியற்காலை டாட்டா காட்டிச் சென்றது. சும்மாவாவது படுத்துக் கிடக்கலாம் என்றால் கனவில் வந்த அதே "திடும் திடும்" என்ற சத்தம் மேல் வீட்டிலிருந்து மண்டையைப் பிளந்தது.
மேல்வீட்டில் வயதான வட்டிக் கடை சேட்டும் அவர் மனைவியும் மட்டும் தான் குடியிருக்கிறார்கள். இப்படி சத்தம் வருமாறு அப்படி என்ன செய்கிறார்கள் என்று யோசித்தபடியேறி கதவை தட்டினேன்.
கதவைத் திறந்த பெண்ணுக்கு ஓட்டுப் போடும் வயது கூட இருக்காது. பாலில் குளிப்பாளோ என சந்தேகிக்க வைக்கும் கலரில், காலரா வந்த நமீதா போல ஸ்லிம்மாக இருந்தாள். கையிலிருந்த ஸ்கிப்பிங் கயிறைப் பார்த்து இவள் தான் குதித்திருக்கிறாள் என யூகித்தேன். ஏதோ ஹிந்தியில் கேட்ட அவள் என் முழியைப் பார்த்து, ஆங்கிலத்துக்குத் தாவி ஏதோ கேட்டாள்.

நமக்குத் தான் "Machine" என்பதை "மச்சினி" என்று படிக்கும் ஆங்கில அறிவாச்சே

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons