நம்ம ஊரைப் பொறுத்தவரை மகப்பேறு மருத்துவர் என்றாலே, வெள்ளைக் கோட் அணிந்த, கண்ணாடி போட்ட குண்டு டாக்டர் ஆண்ட்டி தான். ஆனால், மேலை நாடுகளிலெல்லாம் ஆண் மகப்பேறு மருத்துவர் பலர் உண்டு. "ஆண் மகப்பேறு மருத்துவர், சொந்த கார் இல்லாத மெக்கானிக்" என்று ஆண் மகப்பேறு மருத்துவரைப் பற்றி ஒரு அமெரிக்க காமெடியன் கூறினார்.
எனக்குத் தெரிந்து ஒரு வயதான ஆண் மகப்பேறு மருத்துவர் ஆந்திராவில் இருக்கிறார். அவர் எய்ட்ஸ் கிருமி பற்றிய ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டவர். பொதுவாக HIV கிருமி உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையான முறையில் இல்லாமல் சிசேரியன் முறையில் குழந்தையை எடுத்து விடுவார்கள். இவ்வாறான சிசேரியன் செய்வதில் நம்ம ஆள் கில்லாடி.
இப்படி ஒரு ஹெச்.ஐ.வி. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது, திடீரென பனிக்குட நீர் உடைந்து சிதறி அவரை முழுவதும் நனைத்திருக்கிறது. என்ன தான் பச்சை அங்கி அணிந்திருந்தாலும், அந்த நீர் அப்படியே ஊடுருவி, அவருடைய உள்ளாடை வரை நனைத்து, "சொல்லாத இடம் கூட குளிர்கின்றது" என்ற அளவிற்கு நனைத்து, ஏசி குளிரிலும் அவருக்கு வேர்த்திருக்கிறது. உடனே ஆபரேஷனை அவசர கதியில் முடித்து, ஆறு பக்கட் தண்ணீரில் குளித்திருக்கிறார் நம்ம டாக்டர்.
அன்றிரவு துக்கம் தொண்டையை அடைத்து, தூக்கம் நொண்டி அடிக்க, நம்ம மகப்பேறு டாக்டர் தன்னுடைய பேராசிரியருக்கு அர்த்த ராத்திரியில போன் போட்டு கதறியிருக்கிறார். அந்த வயதான பேராசிரியரும் நடுநிசியிலும் வைராலஜி கிளாஸ் எடுத்திருக்கிறார். அவருடைய அறிவுரைப் படி பல புத்தகங்களையும், இணைய தளங்களிலும் உலவி படித்திருக்கிறார். அது போக முன்னெச்சரிக்கையாக மருந்துகள் வேறு ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாப்பிட்டிருக்கிறார்.
திடீரென மரண பயம் தன்னை ஆட்கொள்ளும் போதெல்லாம், நேர காலம் பார்க்காமல் பேராசிரியரை போன் போட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
திடீரென மரண பயம் தன்னை ஆட்கொள்ளும் போதெல்லாம், நேர காலம் பார்க்காமல் பேராசிரியரை போன் போட்டு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
பின்னர் பேராசிரியர் அறிவுரையின் படி ஹெச்.ஐ.வி ஜன்னல் கால (Window Period) முடிவில், தன் ரத்தத்தை சோதித்துப் பார்த்திருக்கிறார். அந்தச் சோதனையில் ஹெச்.ஐ.வி கிருமி இல்லை என்று தெரிந்தும் அவருக்கு மனம் சமாதானமாகவில்லை. திரும்பவும் அன்றிரவு பேராசிரியருக்கு போன் போட்டு கதறியிருக்கிறார். தான் அடுத்த நாள் ஒரு ஹெச்.ஐ.வி. பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப் போவதாகக் கூறி, தனக்கு பயமாக இருப்பதாகவும் நாலு வார்த்தை ஆறுதல் கூறுங்கள் என்றிருக்கிறார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வயதான பேராசிரியர் சற்றும் யோசிக்காமல் கூறினார் " டாக்டர் தம்பி, இனிமேல் சிசேரியன் செய்வதாக இருந்தால், மறக்காமல் காண்டம் போட்டுக்க".
Related Posts:
2 comments:
ஹா ஹா ஹா........ரசிக்கத்தக்க எழுத்து நடை.....மிகவும் ரசித்து படிக்க முடிந்தது..!
Thanks Ramesh :-)
Post a Comment